எஸ்.பி.பி.க்கு பதிலாக உயிருடன் இருக்கும் எம்.பி.க்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு!!

26 September 2020, 5:25 pm
sellur raju - - updatenews360
Quick Share

திண்டுக்கல் : மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பதிலாக உயிருடன் இருக்கும் அதிமுக எம்.பி.க்கு அமைச்சர் செல்லூர் ராஜு இரங்கல் தெரிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் சென்ற அமைச்சர் செல்லூ ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், அதிமுகவின் ராஜ்ய சபா எம்.பி.யான எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் இறந்து விட்டதாக நினைத்து, “அம்மாவின் அன்பையும், ஆதரவும் பெற்றவர் அவர். ஜெயலலிதா மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாக குரல் கொடுத்தவர்,” எனக் கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரை இடைமறித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உயிரிழந்தது பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் என தெளிவுபடுத்தினார்.

இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு, ஆய்வுப் பணியில் இருந்து வருவதால், எதுவென்று தெரியாமல் போய்விட்டது எனக் கூறினார். பின்னர், மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு இரங்கல் தெரிவித்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.