”திமுக டெல்லிக்கு செல்வது பதவிக்கும் மட்டுமே”: அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு…!!

By: Udayaraman
4 October 2020, 6:04 pm
Quick Share

மதுரை: திமுக டெல்லிக்கு செல்கிறது என்றால் கட்சிக்கும், பதவிக்கும் மட்டுமே, ஆனால் முதல்வரும், துணைமுதல்வரும் மக்களுக்காக தமிழக பிரச்சனைக்களுக்காக செல்கின்றனர் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.
அப்போது அமைச்சர் பேசியதாவது:- மதுரையில் கிழக்கு மேற்கு மத்திய,தெற்கு உள்ளிட்ட நான்கு தொகுதிகளையும் நாம் கைப்பற்ற வேண்டும். அதிமுகவுக்கு புதுமுகங்கள் இளைஞர்கள் தானாகவே வந்து கொண்டிருக்கின்றனர். எந்த இயக்கத்திலும் இது போன்று கிடையாது. ஒரு சிலர் எது ஆளுங்கட்சியாக இருக்கிறதோ அந்தக்கட்சியில் சேர்ந்துகொள்வார்கள், ஆனால் கொள்கைக்காக இருப்பவர்கள் அதிமுகவினர். அதிமுகவை சிலபேர் சாதாரண கட்சியாக நினைக்கின்றனர். சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் கலைஞர், ஆனால் மக்கள் எம்.ஜி.ஆர் பக்கம் நின்றார்கள்,மானம் ரோஷம் எப்போதுமே திமுகவுக்கு இருந்தது கிடையாது.

பதவிக்காக எதையும் இழக்கக்கூடியவர்கள் திமுகவினர். எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா காலத்திலும் கட்சியில் துரோகம் இருந்தது. பல துரோகிகளை அதிமுக சந்தித்துள்ளது. அதிமுகவில்,ஆட்சியில் பதவி வாங்கி உயர்ந்தவர்கள் துரோகம் செய்து விட்டு ஒடிய போதும் கட்சியை கட்டிக்காத்தவர்கள் அடிமட்ட தொண்டர்கள். மதுரையில் ஒருகாலத்தில் அழகருக்கும் மீனாட்சிக்கும், சொக்கருக்கும் இல்லாத செல்வாக்கு அழகிரி இருந்தது. அவர் மதுரையில் இருந்த போது தான் ஜெயலலிதாவுக்கு 19 மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டது. திமுக ஆட்சிக்கு வரும் வரும் எனச்சொல்லி அது அப்படியோ போய்விட்டது. பொங்கலுக்கு திமுக ஆட்சிக்கு வரும் எனக்கூறி காசுக்கு ஆள்பிடித்தார் ஸ்டாலின். திமுகவை போல அதிமுக கம்பெனி அல்ல. ஸ்டாலின் நினைத்தால் தான் பொருளாளர், துணைச்செயலாளர், துணைத்தலைவர் பதவி,ஆனால் அதிமுக உண்மையான ஜனநாயக இயக்கமாக உள்ளது. ஸ்டாலினுக்கு விவசாயியாக கூட நடிக்கத்தெரியவில்லை.

விவசாயிகள் முன்பு சரியாக கூட படிக்கத்தெரியவில்லை, பாரதப்பிரதமரே பாராட்டிய அரசு அதிமுக அரசு,திமுக டெல்லிக்கு செல்கிறது என்றால் கட்சிக்கும், பதவிக்கும் மட்டுமே,ஆனால் முதல்வரும், துணைமுதல்வரும் மக்களுக்காக, தமிழக பிரச்சனைக்களுக்காக சென்றனர். திமுக ஊழலுக்காகவே இருக்கும் கட்சி, திமுக தற்போது அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறது. கோஷ்டி பூசலை சொல்லி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திமுக நினைக்கிறது. ஜனநாயக இயக்கம் என்றால் கோஷ்டி பூசல் இருக்கத்தான் செய்யும், திமுகவில் ஜனநாயகம் பேசி விட முடியுமா? ஸ்டாலினை தவிர வேறு யாரும் பேசி விட முடியுமா?,திமுக ஒரு கம்பெனி அவரை எதிர்த்து யாரும் நிற்க முடியுமா அவர் எதிர்த்தார். அனைவரும் காலி,திமுக எனக்கு ஒரு தீயசக்தி அதை வேரோடு மண்ணோடு ஒழிக்க வேண்டும்,திமுக கட்சியை வளர விட மாட்டோம் ஆட்சியில் அமற விட மாட்டோம். பத்தாண்டுகளில் கட்டப்பஞ்சாயத்து இல்லாத ஆட்சி கொடுத்துள்ளது அதிமுக. தங்கத்தை தோண்டி எடுக்கும் மாநிலங்களில் கூட தங்கத்தை இலவசமாக கொடுப்பதில்லை ஆனால் அதிமுக கொடுக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 38

0

0