அசெம்பிளியை காரணம் காட்டி ஆஜராகாத அமைச்சர் செந்தில் பாலாஜி : ஒரு மாதம் விலக்கு கேட்டு அமலாக்கத்துறைக்கு கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2021, 11:18 am
Senthil Balaji- Updatenews360
Quick Share

மதுரை : வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமலாக்கத்துறை முன் ஆஜராக அவகாசம் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக 2.8 கோடி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்தனர்.

சென்னை போலீசாரின் வழக்கு அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து இன்று மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பட்டது. இந்த நிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை முன் ஆஜராக 1 மாதம் கால அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

வழக்கு தொடர்பாக இன்று மதுரை அமலாக்கத்துறை துணை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என்றும் சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 331

0

0