எடப்பாடி முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ஸ்டாலின் கண்டபடி பேசுகிறார் : அமைச்சர் எஸ்பி வேலுமணி தாக்கு!!

25 October 2020, 1:52 pm
SP vElumani - Updatenews360
Quick Share

கோவை : அனைத்து தரப்பு மக்களும் பாராட்டக்கூடிய வகையில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி, மீண்டும் முதலமைச்சர் ஆகிவிடுவார் என்ற பயத்தில் ஸ்டாலின் கண்டபடி பேசகிறார் என அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டு ஆயுத பூஜையை கொண்டாடினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், தமிழக முதல்வர் எடப்பாடி யார் அற்புதமான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். பின்னர் அனைவருக்கும் விஜயதசமி ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இன்றைய தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் குறிப்பாக ஏழை நடுத்தர மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என ஒட்டுமொத்தமாக அனைவரும் பயன்பெறும் வகையில் பாராட்டக்கூடிய ஆட்சியை எடப்பாடியார் நடத்திக் கொண்டிருக்கிறார்.

விவசாயி என்று சொல்லுகின்ற தகுதி முதல்வர் எடப்பாடி அவர்களுக்கு உள்ளது. அவர் உண்மையான விவசாயி ஸ்டாலின் போல் கரும்புக் காட்டுக்குள் கான்கிரீட் போட்டு நடந்து செல்வது இல்லை, நடிப்புக்காக விவசாயி போல் வேடம் ஏற்கிறார் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் அண்ணன் எடப்பாடியார் என கூறினார்.

விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னென்ன திட்டங்கள் தேவையோ மேலும் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிந்து பூர்த்தி செய்தவர் அண்ணன் எடப்பாடி அவர்கள், இன்றைக்கு மேட்டூர் அணையில் 100 அடி தண்ணீர் உள்ளது கோவையில் பவானி அணை மேலும் குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தார்.

கரிகால சோழன் காலத்தில் இருந்த குடிமராமத்து திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தவர் எடப்பாடியார். தற்போது அனைத்து ஏரிகள் மற்றும் குளங்களையும் கூடுதலாக தண்ணீர் தேங்கியுள்ளது.

முக ஸ்டாலினுக்கு என்ன பயம் என்றால் எப்போது ஓபிஎஸ் அவர்கள் 2021ல் முதலமைச்சர் வேட்பாளர் அண்ணன் எடப்பாடி யார் என்று அறிவித்தாரோ அன்றிலிருந்து ஸ்டாலின் பொய்களை வாரி தூற்றி கொண்டுள்ளார்.

நீட் தேர்வை கொண்டுவந்தது திமுக காங்கிரஸ் தான் என கூறிய அமைச்சர் வேலுமணி, ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்தது அண்ணன் எடப்பாடி அவர்கள் தான். இன்றைக்கு ஆளுநர் இடமும் சென்று உள்ளது.

இப்படி ஒரு வாய்ப்புகள் ஏழை மாணவர்களுக்கும் அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கும் இருக்கின்றது என்பதை கொண்டு வந்தவர் அற்புதமான முதல்வர் எடப்பாடி யார் தான்.

2021 மீண்டும் எடப்பாடியார் முதல்வராவது உறுதி. இன்றைக்கு அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்ட முதல்வர் நேரடியாக தன்னுயிரை துச்சமென மதித்து மக்களுடைய உயிர் முக்கியம் முக்கியம் என்று ஒவ்வொரு மாவட்டமாக சென்று covid-19 தடுப்பு நடவடிக்கை திட்டங்களை ஆய்வு செய்து எந்த சூழ்நிலையிலும் மக்களுக்காக இயங்கிக்கொண்டு உள்ளவர் அண்ணன் எடப்பாடி. 2021 மீண்டும் முதல்வராவது உறுதி என்ற பயத்தில்தான் ஸ்டாலின் பேசி உள்ளார் என்றார்.

Views: - 17

0

0