புதிய அரசு பேருந்தை ஒட்டி, தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!

5 July 2021, 5:33 pm
Quick Share

அரியலூர்: ஆனந்தவாடி-ஜெயங்கொண்டம் வழித்தடத்தில் பிட்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய பேருந்தை இயக்கி தொடங்கி வைத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள ஆனந்தவாடி கிராமத்தில் பொதுமக்கள் போக்குவரத்து வசதிக்காக கூடுதல் பேருந்து போக்குவரத்து வசதியினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்எஸ்.சிவசங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அதே பேருந்தினை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓட்டிச்சென்றார். அப்போது செல்போனில் படம் பிடித்த சிலர் அமைச்சரை செல்போனை பார்க்க சொன்னார்கள்.

அதற்கு நான் பார்த்தால் வண்டியை எப்படி ஓட்டுவது எனவும், எந்த ஊருக்கு வண்டியை ஒட்டலாம் என கேட்டதால் சிரிப்பலை ஏற்பட்டது. அமைச்சர் பேருந்தை ஓட்டியதை கண்டு கிராம மக்கள் உற்சாகமடைந்தனர் உடன் அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, பொதுமக்கள் என பலரும் பயணம் செய்தனர். இந்த பேருந்து ஜெயங்கொண்டத்திலிருந்து உடையார்பாளையம் வழியாக ஆனந்தவாடி கிராமத்திற்கு இரு முறை வந்து செல்லும் என தெரிவிக்கபட்டது.

Views: - 104

0

0