குருநானக் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையம் ; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த பெருமிதம்…!!

Author: Babu Lakshmanan
20 December 2023, 10:00 pm

சென்னை குருநானக் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னையைத் தொடர்ந்து கனமழை மற்றும் வெள்ளத்தால் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு வந்தார்.

இந்த நிலையில், குரு நானக் கல்லூரி வளாகத்தில் ஷாஹித் பகத் சிங் விளையாட்டு வளாகம் மற்றும் சர்கஹி துப்பாக்கி சுடுதல் விளையாட்டு பயிற்சி மையத்தை அவர் திறந்து வைத்தார். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதல்முறையாக கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் வரும் ஜனவரி 19 முதல் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிகள் அனைத்தும் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. இது போன்று கல்லூரி மேற்கொள்ளும் அனைத்து விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசும் நானும் துணை நிற்போம், எனக் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!