ஒரே தொகுதியில் 7 முறை களம் காணும் அமைச்சர்

Author: Udhayakumar Raman
16 March 2021, 10:02 pm
Minister Jayakumar -Updatenews360
Quick Share

அரசியல் வரலாற்றில் பலரும் தொடர்ந்து பலமுறை தேர்தலில் வேட்பாளராக நிற்பது உண்டு. ஆனால், எவ்வளவு பெரிய விஐபியாக இருந்தாலும் அவர்களும் கூட அவ்வப்போது தொகுதிகளை மாற்றிக் கொண்ட வரலாற்றை நாம் அறிந்திருப்போம். ஆனால், தான் பிறந்த மண்ணில் தொடர்ந்து ஏழு முறை தொகுதி மாறாமல் களம் காணும் ஒரே மனிதர் யார் என்றால் அவர்தான் அமைச்சர் ஜெயக்குமார்.

1991 முதல் 2021 வரை ஏழு முறை ராயபுரம் தொகுதியின் ஒரே வேட்பாளர் யார் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லாமல் அதிமுக தலைமை இவரைத்தான் வெற்றி வேட்பாளராக களம் இறங்குகிறது. காரணம் தொகுதி மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் இவர்தான் என்பது அசைக்க முடியாத ஆணித்தரமான உண்மை. அதை நிரூபிக்கும் வகையில் ஏழு முறை போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 1991 முதல் ராயபுரம் மக்களின் குறைதீர்க்கும் மனுநீதிச்சோழனாய் இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ராயபுரத்தில் ஏழாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் அமைச்சர் ஜெயக்குமார். இதில் 5 முறை அவர் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் குடிசை இல்லாத தொகுதியாக ராயபுரம் தொகுதி மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் தண்ணீர் தேங்காத தொகுதியும் மின்தடை ஏற்படாத ஒரே தொகுதியில் ராயபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தொகுதிக்கான நிதியை 100% உபயோகப்படுத்திய ஒரே எம்எல்ஏ இவர் என்பது கூடுதல் சிறப்பு.

வடசென்னை மக்களின் மருத்துவத்திற்கு பயன்படும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ஆர்.எஸ்.ஆர். எம் மருத்துவமனைக்கு அரசிடமிருந்து அதிகமான நிதியை பெற்று மக்களுக்கு தரமான சிகிச்சை தந்ததில் இவரது பங்கு அளப்பரியது. மக்களுக்கு எல்லா விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் திமுகவினர் யாரும் களத்தில் வந்து பணியாற்றவில்லை. ஆனால், இவர் உயிரையும் பொருட்படுத்தாமல் பல இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி உதவிக்கரம் நீட்டி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.

கட்சி பாகுபாடுகளை மறந்து அனைவரும் நம் தொகுதி மக்கள் என்ற உணர்வோடு இருந்தவர் அமைச்சர் ஜெயக்குமார்.அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்ததில் இவருக்கு நிகர் இவர்தான் என்பது அனைவரும் அறிந்தது. அதனால்தான் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர் என்று முதலமைச்சரே இவரை வியந்து பாராட்டினார். இந்த முறையும் ராயபுரம் மக்கள் இவரை வெற்றி வேட்பாளராக மாற்றுவார்கள் என்பதே அனைவரின் குரலாய் ஒலிக்கிறது.

Views: - 73

0

0