அமைச்சர்கள் என்னை டார்ச்சர் செய்கின்றனர்.. என் உயிருக்கு ஆபத்து : பெண் எம்எல்ஏ பகீர்!
Author: Udayachandran RadhaKrishnan1 September 2025, 6:26 pm
புதுச்சேரியில் அமைச்சர்கள் எனக்கு டார்ச்சர் செய்கிறார்கள், முதலமைச்சருக்காக பொறுத்து போகுறேன் என என முன்னாள் அமைச்சரும் பெண் சட்டமன்ற உறுப்பினருமான சந்திர பிரியங்கா வீடியோ வெளியிட்டுள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் புதுச்சேரியில் இரு அமைச்சர்கள் எனக்கு பயங்கர பிரச்சனை டார்ச்சர் செய்கிறார்கள்.
நான் செல்லும் பாதையில் வேவு பார்க்கிறார்கள். என்னை சுற்றி உளவாளிகள் உள்ளனர். நான் பாதுகாப்பான இடத்தில் இல்லை.
ஒரு பெண் கஷ்டப்பட்டு வளர்ந்து வந்து விடக்கூடாது. வந்தால் அசிங்கப்படுத்தி எவ்வளவு கேவலப்படுத்துகிறீர்கள்.
நான் ஒதுங்கி இருந்தாலும் என்னை கண்ட்ரோல் வைக்க முடியவில்லை என்று டார்ச்சர் கொடுக்கிறார்கள். அமைச்சர் சில நாட்களாக பயங்கர டார்ச்சர் கொடுக்கிறார். நான் அமைச்சராக இருந்தபோது எவ்வளவு பிரச்சனை கொடுத்தார்கள் நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
வீடு வீடாக வாக்கு கேட்டு அலைந்து வெற்றி பெற்ற பிறகு மக்களை மறந்து விட்டு அதிகாரத்தை வைத்துக்கொண்டு இதுபோன்ற செய்வது நாகரிகமான அரசியல் இல்லை. ஓட்டுபோட்ட மக்களுக்கு ஏதாவது செய்யனும்.
முதலமைச்சருக்காக பொறுத்து போகிறேன். முதலதைச்சரும் நிறைய பொறுத்து போகிறார். தேர்தல் வேலைகளை அமைச்சர்கள் பாருங்கள். இதுபோன்று டார்ச்சர் செய்வதை விடுங்கள்.

எனது உயிருக்கு ஆபத்து என்று புகார் கொடுக்க சென்றால் போலீஸ் அதிகாரி நக்கலாக பேசுகிறார் என பெண் எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
