தாராபுரம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர்கள் : நோயாளிகள், உறவினர்கள் சரமாரி புகார்!!

15 May 2021, 5:39 pm
Ministers Inspection - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அரசு மருத்துவமனையை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்த போது பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்வது வழக்கம். இதனைத் தொடர்ந்து இன்று காலை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வார்டுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு எவ்வாறு தடுப்பூசி போடுகிறார்கள் என்பதையும் ஆய்வு செய்தார். அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவு உள்ளனவா என்பதையும் கேட்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து தலைமை மருத்துவர் சிவபாலனிடம் அரசு மருத்துவமனையில் ஏதாவது குறைகள் ஏதேனும் உள்ளதா என்பதை கேட்டறிந்தார். மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் தாராபுரம் தொகுதி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் கொரோனா வார்டில் மருத்துவர்கள் யாரும் வந்து பார்ப்பதில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

அப்போது பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் போதிய மருத்துவர்கள் இல்லை என்றும் விரைவில் மருத்துவர்களை நியமித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதற்கு முன்னதாக ஐடிஐ அரசினர் மாணவர் விடுதியில் புதிதாக ஆக்சிசன் படுக்கைகளுடன் வார்டு தயாராகி வருவதையும் பார்வையிட்டார்.

Views: - 135

0

0