அதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான விவாதமே : அமைச்சர் ஜெயக்குமார்..!

29 September 2020, 3:48 pm
jayakumar- updatenews360
Quick Share

சென்னை : அதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான விவாதமே நடந்தது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சென்னையில் முன்னாள் மேயர் சிவராஜ் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- சென்னை இராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஆரோக்கியமான முறையில் ஜனநாயக ரீதியில் விவாதம் நடைபெற்றது. அதிமுக செயற்குழுவில் சசிகலா பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை.

மேலும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் ஒருபோதும் பாதிக்காது. வேளாண் சட்டத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, எதிர்க்கட்சிகள் போராடி வருகிறது. அந்தப் போராட்டங்களினால் எந்த பலனும் இல்லை, என அவர் தெரிவித்தார்.

Views: - 0

0

0