இரட்டை தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி : புட்டியில் பால் கொடுத்து பாதுகாக்கும் லாரி ஓட்டுநரின் குடும்பத்தினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2022, 6:14 pm

தூத்துக்குடியில் இரட்டை தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி பாட்டிலில் பால் கொடுத்து வளர்த்து வரும் லாரி டிரைவரின் குடும்பத்தினர்.

மனிதன் பிறப்பு மற்றும் விலங்குகளின் பிறப்பில் அவ்வப்போது அதிசயங்கள் நடப்பது அரிதான காரியம் அந்த வகையில் தூத்துக்குடி துறைக்கனி நகரை சேர்ந்தவர் லிங்க பரமசிவம் லாரி டிரைவர் இவரது வீட்டில் இவரது மனைவி அன்ன பேபி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதில் ஒரு ஆடு இரண்டு குட்டிகளை ஈன்றது இதில் ஒரு குட்டி நன்றாகவும் இன்னொரு ஆட்டுக்குட்டி இரட்டை தலையுடன் பிறந்துள்ளது. இரட்டை தலையுடன் பிறந்துள்ள இந்த ஆட்டுக்குட்டிக்கு லிங்கம் என பெயர் சூட்டி வளர்த்து வரும் லிங்க பரமசிவத்தின் குடும்பத்தினர், ஆட்டுக்குட்டிக்கு குழந்தைகளுக்கு கொடுக்கும் பாட்டிலில் பால் கொடுத்து பராமரித்து வருகின்றனர்.

இரட்டை தலையுடன் பிறந்துள்ள இந்த ஆட்டுக்குட்டியை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் ஏராளமானோர் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

  • hans zimmer composing music for ramayana movie starring sai pallavi சாய் பல்லவி படத்தில் இணைந்த கிரிஸ்டோஃபர் நோலன் பட இசையமைப்பாளர்? வெளியான மாஸ் வீடியோ!