மாயமான 28 வயது பெண் : துடித்துடித்த 4 உயிர்கள்.. விசாரணையில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2025, 11:38 am

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள் பவித்ரா (28 ) என்பவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக சின்ன குழிப்பட்டி தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் பள்ளபட்டியைச் சேர்ந்த ஒருவருடன் பவித்ராவுக்கு தொடர்பு ஏற்பட்டதால் அந்த நபருடன் 17. 6.2025 அன்று மாலை 6 மணி அளவில் பவித்ரா வீட்டை விட்டு சென்று விட்டார்.

இதையும் படியுங்க: சினிமா மட்டுமல்ல… தொழிலிலும் மாஸ் காட்டும் ஆர்யா.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு!

இதனால் அவமானம் அடைந்த பாட்டி செல்லம்மாள், மகள் காளீஸ்வரி ஆகியோர் இரண்டு பேரும் பேத்திகளான லித்திக்ஸா (7),தீப்தி (5) குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டனர்.

Missing 28-year-old woman: Mother daughter and great-granddaughters Tragedy Decision

இது குறித்து இடையகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்களை கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!