அதிமுகவில் எந்த அணியும் இல்லை, பிணியும் இல்லை : அமைச்சர் செல்லூர் ராஜு..

4 November 2020, 2:13 pm
Sellur Raju - Updatenews360
Quick Share

மதுரை : அதிமுக அரசை குறை கூறுவதே மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பந்தல்குடி வாய்க்காலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி ஆணையர் விசாகனுடன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில், மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் இருந்து கழிவு நீர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மதுரை மாநகராட்சியில் 2 சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன, நாள் ஒன்றுக்கு 5 வார்டுகளில் இருந்து 1 இலட்சம் லிட்டர் கழிவு நீர் வைகையாற்றுக்குள் விடப்படுகிறது. வைகையாற்றுக்குள் கழிவு நீர் விடப்படுவதை தடுக்க 2 கோடியே 50 இலட்சம் மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எதிர் வரும் சித்திரை திருவிழாவில் வைகையாற்றில் தூய்மையான நீரில் கள்ளழகர் இறங்குவார், மதுரை நகருக்குள் உள்ள 33 ஊரணிகளை புணர் அமைக்கும் பணி நடைபெறுகிறது என தெரிவித்த அவர், உபயோகமற்ற 412 ஆழ்துளை கிணறுகள் மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றப்பட்டு உள்ளது என்றார்.

அதிமுகவில் எந்த அணியுமில்லை, பிணியுமில்லை, அதிமுக அரசை குறை சொல்வதே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேலை. அதிமுகவின் திட்டங்களில் எதிர்கட்சிகளால் குறை கண்டுபிடிக்க முடியவில்லை, ஜெயலலிதாவின் இலட்சியமான 3 ஆம் முறையாக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம் என கூறினார்.

Views: - 17

0

0