சசிகலா வெளியே வந்தால் துணையாக நிற்போம் : நடிகர் கருணாஸ் “ஓபன் டாக்“!!

Author: Udayachandran
13 October 2020, 2:31 pm
Sasikala Karunas - Updatenews360
Quick Share

திருச்சி : தனி ஒருவனாக இருந்து கூட செயல்படுவேனே அந்தக் கட்சியில் இணைக்கமாட்டேன் என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் எம்எல்ஏ வடக்கு தாராநல்லூர் பகுதியில் இருந்த முக்குலத்தோர் தேவர் பேரவை போர்டு சேதப்படுத்தப்பட்டதை பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது, சில சமூக விரோதிகள் தேவர் படத்தை சேதப்படுத்தியுள்ளனர் அது குறித்த திருச்சி மாவட்ட முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்குலத்தோர் புலிப்படைக்கு தனிச் சின்னம் கிடையாது என்றும் ஆண்டாண்டு காலமாக முக்குலத்தோர் சமுதாயம் திராவிட கட்சிகளுக்கு அடிபணிந்து இருக்கவேண்டிய சூழல் நிலவி வருகிறது. இருப்பினும் தேர்தல் நேரத்தில் நிலவும் சூழலை பொருத்து கலந்தாலோசித்து கூட்டணி குறித்து முடிவெடுப்போம். அதிமுக எங்களது தோழமை கட்சி அக்கட்சியில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள் என்றார்.

பாஜகவுடன், முக்குலத்தோர் புலிப்படை இணைப்பு என்ற செய்தி தவறானது. பாரதப்பிரதமர் முக்குலத்தோர் புலிப்படைக்கு அழைப்பு விடுத்தால் வன்னியர்களுக்கு வழங்கப்படுவது போல உள் இட ஒதுக்கீடு தேவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பெயர் வைக்கவேண்டும், மருது சகோதரர்களுக்கு பாராளுமன்றத்தில் சிலை வைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி பிரதமரை சந்திப்பேன் ஆனால் எந்த காலத்திலும் எந்த கட்சியுடனும் முக்குலத்தோர் புலிப்படை சேர்க்கப்பட மாட்டாது என விளக்கம் அளித்தார்.

நடிகர் சங்கம் பொறுத்தவரை நடந்து முடிந்த தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்களை அறிவிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதிமுகவின் அனைத்து அரசியல் நகர்வுகளையும் நடத்தியவர் சசிகலா அவர்களுக்கு என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என கூறினார்.

முதல்வராக எடப்பாடி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் அதிமுக அரசு அங்கீகரிக்கப்பட்டுள்ளது , குடிமராமத்து போன்ற திட்டங்களில் சிறப்பாக செயலாற்றி உள்ளது வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் மக்களுக்கு பிடித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றார்.

Views: - 59

0

0