உண்மையிலேயே TVK யாருக்குச் சொந்தம்? விஜயின் பின்னணி இதுவா?

Author: Hariharasudhan
17 February 2025, 6:43 pm

TVK குறித்து, தேர்தல் ஆணையம் இறுதியிட்டு கூறாமல் இருப்பதன் பின்னணி வெளிவந்து கொண்டிருப்பதாக தவாக தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

திருச்சி: திருச்சியில் செய்தியாளர்களைs சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், “தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆங்கிலச் சுருக்கமாக TVK என்பதை இந்திய தேர்தல் ஆணையத்தில் முதலில் பதிவு செய்தது நான்தான். நடிகர் விஜய் கட்சி தொடங்கி TVK என்று குறிப்பிடத் தொடங்கினார்.

இதன் பின்னர், இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் யார் உண்மையாக TVK என்ற ஆங்கிலச் சுருக்கத்தை பயன்படுத்தலாம் என்பதை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் எனக் கோரி கடிதம் எழுதினேன். அதற்கு இதுவரை தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

எனவே, தேர்தல் ஆணையம் இறுதியிட்டு கூறாமல் இருப்பதன் பின்னணி கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும் இன்னும் சில தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் முழுமையாக விஜய் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் மாற்று அரசியலை கொடுக்க வந்துள்ளாரா அல்லது மற்றவர்களால் வரவழைக்கப்பட்டிருக்கிறாரா என்பது குறித்து, இன்னும் சில நாட்களில் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

T Velmurugan alleges Vijay for name using TVK

முன்னதாக, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை, ஆங்கிலத்தில் சுருக்கமாக TVK என்று அக்கட்சியினர் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு தொடக்கத்திலேயே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் முறையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையிலேயே TVK யாருக்குச் சொந்தம்? விஜயின் பின்னணி இதுவா?இதையும் படிங்க: பின்தொடர்ந்த உருவம்.. கூச்சலிட்ட காவலர்.. அண்ணாமலை கடும் விமர்சனம்!

மேலும், நடிகர் விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சியைத் தொடங்கினாலும், 2026 தேர்தலையே இலக்காகக் கொண்டு விஜய் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, கடந்த அக்டோபரில் விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்திய விஜய், பரந்தூரில் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக போராடியவர்களை நேரடியாகச் சந்தித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!