மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவு.. ஏழைகளுக்கு ஏமாற்றம் : மத்திய பட்ஜெட் குறித்து கமல் கருத்து

1 February 2021, 6:35 pm
Quick Share

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கான பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. மேலும், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்வு, வீட்டுக்கடன் வரிச் சலுகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால லாக்டவுண். ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை.

மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0