மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. மாவட்ட ஆட்சியரால் உயிருக்கு ஆபத்து : பிரபல தொழிலதிபர் பகீர் புகார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2023, 8:22 pm

மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. மாவட்ட ஆட்சியரால் உயிருக்கு ஆபத்து : பிரபல தொழிலதிபர் பகீர் புகார்!!!

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகத்தால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கருணாநிதி சிலை வைக்கும் விவகாரத்தில் தொழிலதிபர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழக திரை உலகின் தந்தை என்று போற்றப்படும் டி ஆர் சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அவரது வாரிசுதாரர்களால் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் கலைஞர் கருணாநிதி எம் ஜி ஆர் ஜெயலலிதா உள்ளிட்ட பிரபலங்கள் தமிழகத்திற்கு அடையாளம் காட்டியது அனைவரும் அறிந்ததே

மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவாக அதன் நுழைவாயில் இன்றளவும் தனியாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நினைவுச் சின்னம் அமைந்துள்ள 1350 சதுர அடி நிலத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் விலைக்கு கேட்டதாகவும் அது குறித்து ஆலோசனை செய்து பதில் அளிப்பதாக நிலத்தின் உரிமையாளர் விஜய வர்மா கூறியுள்ளார்.

இதனிடையே தமிழக முதல்வரின் நன்மதிப்பை பெற சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் நுழைவு வாயில் சின்னம் அமைந்த பகுதியை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என்று கூறி அதிகாரிகளை பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுவதாக நில உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

அந்த இடத்தில் டி.ஆர் சுந்தரம் சினிமா எடுக்க பயன்படுத்திய உபகரணங்களை காட்சி பொருளாக வைக்க திட்டமிட்ட இருந்த நிலையில் கருணாநிதியின் சிலை வைப்பதற்காக நிலத்தை அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிலை வைக்க நிலம் கொடுக்காத காரணத்தினால் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பொறுப்பை மறந்து நான்காம் தர மனிதர்களை போன்று அராஜகப் போக்கில் ஈடுபடுவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகத்தால் தங்களது குடும்பத்திற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!