சாமி கும்பிடும் ‘கேப்‘பில் மொபட் திருட்டு : சிசிடிவியில் முதியவர்.. அதிர்ச்சி காட்சி!!!

20 July 2021, 4:57 pm
Moped Theft -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : திற்பரப்பு மகாதேவர் திருக்கோயில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை முதியவர் ஒருவர் அலேக்காக திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு வழிபட்டு தலங்களை திறக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பழமையான புகழ் பெற்ற திற்பரப்பு ஸ்ரீ மகாதேவர் திருக்கோயிலுக்கு இன்று சாமி தரிசனம் செய்ய தனது இருசக்கர வாகனத்தில் (Tvs XL) வந்த விஜயகுமார் என்பவர் கோவில் வளாகத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றார்.

தொடர்ந்து சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய விஜயகுமார் தனது இருசக்கர வாகனத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து குலசேகரம் காவல் நிலைய போலீசாருக்கு புகார் கொடுக்க பட்ட நிலையில் போலீசார் சி சி டி வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது கால் சுகமில்லாத வயதான ஒருவர் சுற்றி சுற்றி வாகனத்தை பார்ப்பதும் தொடர்ந்து வாகனத்தை ஒட்டி செல்வதும், சிசிடிவி.,யில் பதிவாகி இருந்தது. அந்த நபர் குறித்து குலசேகரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 143

0

0