அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!
Author: Udayachandran RadhaKrishnan19 April 2025, 6:56 pm
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன்,
கடந்த ஆண்டு அரசு மருத்துவமனைக்கு வந்த போது காத்திருப்போர் அறை வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள். நல்ல முறையில் காத்திருப்போர் அறை அமைத்து கொடுத்து இருக்கின்றனர்.
இதையும் படியுங்க: விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!
சட்டமன்ற உறுப்பினராக இதில் பங்களித்து இருக்கின்றோம் என்பதில் மகிழ்ச்சி. பிரசவ வார்டுகளுக்கு வரும் பெண்களின் குடும்பத்தினர் தங்குவதற்கு வசதியாக இது இருக்கும். அரசு மருத்துவமனையில் இடபற்றாகுறை மிகப் பெரிய நெருக்கடி கொடுக்கின்றது. வாகனங்களை நிறுத்த முடியாத நிலை இருக்கின்றது.
மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் உள்ள பழைய கட்டிடங்களை அகற்ற வேண்டும் , அங்கு பார்க்கிங் வசதியுடன் கட்டிடங்கள் அமைக்க வேண்டும்.இன்னும் அதிகமான வசதிகளை பெற என் பங்களிப்பை வழங்குவேன்.

இன்று மாலை மாநில தலைவர் நயினார் நகேந்திரன் கோவை வருகிறார்.தேர்தலுக்கான தயாரிப்பு பணிகள், வியூகங்கள் குறித்து ஆலோசனை வழங்குகின்றார். அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
கோவையின் பிரச்சினைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.திமுக நிர்வாகிகள் பல நேரங்களில் கேவலமாக பேசுகின்றனர்.இது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
சினிமாவில பேசும் வசனத்தை போல கமல் பேசி இருப்பார்.மீண்டும் மொழிப்போருக்கான அவசியம் என்ன இருக்கின்றது?.மத்திய அரசு எந்த மொழியும் கட்டாயபடுத்தவில்லை. தனியார் பள்ளிக்கு பிறமொழிகள் கற்க அனுமதிப்பதை ஏன் அரசு பள்ளிகளுக்கு கொடுக்க வில்லை என கேட்கின்றோம்.
கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரும்.வெற்றிக்கூட்டணியாக இருக்க போவது தேசிய ஜனநாயக கூட்டணி.நாம் தமிழர் கட்சி தலைவர் சினிமா டைரக்டர்,நல்ல வசனம் பேசுவார்,நாங்கள் அதை ரசிப்பதுண்டு.
2026 இல் தமிழகத்தில் வரலாற்றில் இல்லாத அளவில் அதிகமான பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம்.கோவையில் 10 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் மாணவி சீனிவாசன் தெரிவித்தார்.