ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்பு.. உயிர் பலியும் அதிகரிப்பு : கோவை கொரோனா நிலவரம்!!
Author: Udayachandran RadhaKrishnan18 January 2022, 8:01 pm
கோவை : கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான மாநில சுகாதாரத் துறையின் அறிக்கை வெளியாகியுள்ளது, அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் ஆயிரத்திற்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று இரண்டாயிரத்து கடந்தது. இன்றும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று 2228 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழப்போர் எண்ணிக்கை மாவட்டத்தில் குறைந்திருந்த நிலையில் திடீரென இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளார்.
தற்போது 11 ஆயிரத்து 594 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 786 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 69 ஆயிரத்து 050 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதுவரை 2536 பேர் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0