சோசியல் மீடியாவில் பதிவிடும் போட்டோவை டவுன்லோடு செய்து ஆபாச ‘மார்ஃபிங்’.. பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது..!

Author: Vignesh
27 July 2024, 3:38 pm

பெண்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தவரை புகாரின் அடிப்படையில் கைது செய்த சைபர் கிரைம் போலீசார்.

கடந்த 10.05.2024 .ஆம் தேதி என்று மதுரை மாவட்ட சிறக காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரின் குடும்பத்தில் உள்ள பெண்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி ஆபாசமாகவும், அருவருக்கத் தகுக்க வகையிலும் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் மற்றும் டெலிகிராமிலும் பதிவிட்டுள்ளதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் ஆத்து பாளையம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில், பெண்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் புகைப்படங்களை திருடி அதில் வேறு பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும், எக்ஸலண்ட் மற்றும் telegramல் பதிவேற்றி இருப்பது உண்மை என தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் அவரை கைது செய்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய செல்போன் சிம் கார்டுகள் மற்றும் இன்டர்நெட்டிற்கு பயன்படுத்துரிய மோடம் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். குற்ற சம்பவம் தொடர்பாக குற்றவாளி யார் என்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!