கொசுவை விரட்ட வீட்டில் புகை: மூச்சுத்திணறி 2 பேர் பலி…இருவர் நிலைமை கவலைக்கிடம்..!!

22 July 2021, 4:47 pm
Quick Share

சென்னை: சென்னை பல்லாவரத்தில் கொசுவை விரட்ட புகை மூட்டம் போட்டு தூங்கியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த, பம்மல், திருவள்ளுவர் தெரு, பொன்னி நகரில் ஒரு வீட்டில் நான்கு பேர் இரவு தூங்கியுள்ளனர். இன்று காலை வீடு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து வீட்டில் இருந்து புகை வெளியே வரத்துவங்கியுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் உள்ளே சென்று பார்த்த போது நான்கு பேர் வீட்டில் மயக்க நிலையில் இருந்துள்ளனர்.

போலீசார் தகவல்

நான்கு பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்பலட்சுமி என்ற பெண் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மீதமுள்ள சொக்கலிங்கம், விஷால், மல்லிகா, மூவரின் நிலை மோசமாக இருப்பதாக கூறி மேல் சிகிச்சைகாக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூன்று பேர் கவலைக்கிடம்

இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேரில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தகவல் வீட்டில் கொசு தொல்லை இருப்பதால் புகை மூட்டம் போடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், அதே போல் நேற்றிரவும் புகை போட்டுள்ளனர்.

குரோம்பேட்டை

இதனால் உருவான புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொசுவை விரட்ட போட்ட புகை மூட்டம் 2 பேர் உயிரை பறித்து, மற்றவர்களையும் உயிருக்கு போட வைத்த சம்பவம் சென்னை பல்லாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 103

0

0