குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த தாய் : மருத்துவர்கள் மெத்தனமே காரணம் என முற்றுகையிட்ட உறவினர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2021, 8:31 pm
Mother Dead - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலமாக பெண் குழந்தை பிறந்த நிலையில் தாய்க்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேலாயுதபுரத்தினை சேர்ந்தவர் பிரோம்குமார் (வயது 30). கார்மெக்னிக்காக உள்ளார். இவரது மனைவி சுபா (வயது 28). இவர் லேப் டெக்னீசியன் படித்துள்ளார்.

இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. கர்ப்பமாக இருந்த சுபா கடந்த 25ந்தேதி முதல் பிரசவத்திற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.

திங்கள் கிழமை காலையில் சுபாவிற்கு அறுவை சிகிச்சை மூலமாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருந்துள்ளனர். இந்நிலையில் இரவில் தீடீரென சுபாவிற்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

2மணி நேரத்தில் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். இந்நிலையில் சுபாவிற்கு வலிப்பு ஏற்பட்ட போது பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் இல்லை என்றும், மேலும் இது குறித்து செவிலியர்களிடம் கூறிய போது அலட்சியமாக செயல்பட்ட காரணத்தினால் சுபா உயிரிழந்துவிட்டதாக கூறி சுபாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுக்கையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையெடுத்து கிழக்கு காவல் நிலைய போலீசார் மற்றும் மருத்துவர்கள் சுபாவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சுபாவின் மரணத்திற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியம் தான் காரணம் என்றும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை சுபாவின் உடலை வாங்க போவதில்லை என்று கூறிவிட்டனர்.

இதையெடுத்து போலீசார் சுபாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் தாய் இறந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 155

0

0