விழுப்புரம் அருகே சுவர் இடிந்து தாய் பலி : உயிருக்கு போராடும் மகன்!!

26 November 2020, 1:41 pm
villupuram House Damage Dead - Updatenews360
Quick Share

விழுப்புரம் : புயல் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து தாய் பலியான நிலையில், மகன் படுகாயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விழுப்புரம் அருகே உள்ள கோனூர் கிராமத்தில் கந்தசாமி என்பவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர் ஒரே இடத்தில் இரண்டு விடுகள் கட்டி இரண்டு மனைவிகளுடன் வசித்து வந்தார் இவரது முதல் மனைவி ராஜேஸ்வரி மற்றும் மகன் ஆதி ஆகிய இருவரும் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் இரண்டு நாட்களாக பெய்த மழை புயல் காரணமாக இன்று அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து தூங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது மகன் ஆதி ஆகிய இருவர் மீதும் விழுந்தது சத்தம்கேட்டு இரண்டாவது மனைவி வீட்டில் இருந்த கந்தசாமி ஓடிவந்து பார்த்த போது சுவர் இடிந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து சுவர்களை அப்புறப்படுத்தி ராஜேஸ்வரியும் மகன் ஆதி ஆகிய இருவரையும் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ராஜேஸ்வரி உயிரிழந்தார்.

பின்னர் படுகாயமடைந்த ஆதியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜேஸ்வரியின் கணவர் இரவு இரண்டாவது மனைவி வீட்டில் இருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 25

0

0