குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு.. இன்ஸ்டா காதலனுடன் பறந்த தாய்… அதிர்ச்சி வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2025, 1:55 pm

கள்ளக்காதலுக்காக எந்த காரியத்தையும் செய்ய இன்றைய கால சந்ததியர்கள் தயாராக உள்ளனர் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாகியுள்ளது.

ஐதராபாத் அருகே பேருந்து நிலையத்தில் குழந்தை ஒன்று தவித்துக் கொண்டிருந்தது. அருகில் இருந்தவர்கள் யாருடைய குழந்தை என தெரியாமல் விழித்தனர். இது குறித்து பேருந்து நிலைய அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

பேருந்து நிலையத்தில் குழந்தை அழுது கொண்டிருந்த நிலையில், அதைக் கண்ட அதிகாரிகள், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

ஐதராபாத்தைச் சேர்ந்த நவீனா என்ற பெண், தனது 15 மாத ஆண் குழந்தை தனுஷை பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டுவிட்டு, தனது காதலனுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற காட்சி பதிவாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

நவீனா இன்ஸ்டாகிராமில் சந்தித்த ஒரு நபருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அவருடன் செல்வதற்காக, தனது கணவன் மற்றும் குழந்தையை விட்டு விலக முடிவு செய்து இந்தச் செயலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Mother leaves child at bus station and flies off with Instagram boyfriend... Shocking video!

சிசிடிவி காட்சிகளை குழந்தையிடம் காண்பித்தபோது, அவர் “அம்மா” என அழைத்தது அதிகாரிகளை உருக்கியது. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியபோது, அந்த பைக், நவீனாவின் காதலன் தனது நண்பரிடம் இருந்து கடன் வாங்கியது என்பது தெரியவந்தது.

இதையடுத்து, குழந்தையின் தாய் நவீனா, அவரது காதலன் மற்றும் குழந்தையின் தந்தை ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!