சென்னை அருகே பைக் மோதி 6 மாத குழந்தையுடன் தாய் பலி : மதுபோதையில் அதிவேகமாக வந்த இளைஞரைல் நேர்ந்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2022, 11:18 am

சென்னை அருகே என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் பூங்குழலி (வயது 28). இவருக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை தனது குழந்தையை தூக்கிக் கொண்டு அமைந்தகரை பகுதியில் உள்ள அண்ணா நினைவு வளையம் அருகே சாலையை கடக்க முயன்றார்.

அப்போது மது போதையில் பெண் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் , பூங்குழலி மற்றும் அவரது கைக்குழந்தை மீது வேகமாக மோதியுள்ளார். இதில் பெண்ணும் குழந்தையும் தூக்கி வீசப்பட்டனர்.

அப்போது சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பூங்குழலி மற்றும் அவரது குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து அதிவேகமாக பைக்கில் வந்து விபத்தை ஏற்படுத்திய நபரையும் அவருடன் வந்த பெண்ணையும் போலீஸார் அண்ணாநகர் கே 4 காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?