அதிரடி ஆக்ஷன் எடுக்கப் போகும் புதிய எஸ்பி… கோவை ரவுடிகளுக்கு பயத்தைக் காட்டும் போலீஸ் அதிகாரி கார்த்திகேயன்!!!

Author: Sudha
14 August 2024, 12:16 pm

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பத்ரிநாரயணன் இருந்தார்.இவர் கோவை சிபிசிஐடி தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டார்.இந்நிலையில் கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி கார்த்திகேயன்,கோவை மாவட்டத்தின் 43-வது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளேன்.மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருப்பதற்கு அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொள்வேன். சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்கள் தடுக்க அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள் நடமாட்டம் தடுக்கப்படும். போதை பொருள் விவகாரத்தில் முக்கிய கவனம் எடுத்து கண்காணிக்கப்படும்.
மேலும் இளைஞர்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்தலின் விளைவு குறித்தான விழிப்புணர்வு நிகழ்வுகள் அதிக அளவில் ஏற்படுத்தப்படும்.

பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.போக்குவரத்து விபத்து நடைபெறும் இடங்களில் ஆய்வு செய்து அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் முன்னதாக சிசிடிவி கேமராக்கள், போலீஸ் பற்றாக்குறை போன்றவை ஆய்வு செய்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பழைய குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதை தொடர்ந்து மீண்டும் மோதல் கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!