விக்னேஷ் புத்தூரிடம் தோனி சொன்ன ரகசியம்.. வெளியான சஸ்பென்ஸ்!

Author: Hariharasudhan
25 March 2025, 12:54 pm

ஐபிஎல்லில் தேர்வாகச் செய்த பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என விக்னேஷ் புத்தூருக்கு தோனி அறுவுறுத்தியுள்ளார்.

சென்னை: 18வது ஐபிஎல் சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் (மார்ச் 23) சென்னை – மும்பை அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி, சென்னையில் நடைபெற்றது. இதில் முதலில் ஃபீல்டிங் செய்த சிஎஸ்கே 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கியது.

இதன்படி, சென்னை அணிக்கு கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் 26 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்தார். இதனிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் பந்துவீச்சாளர் விக்னேஷ் புத்தூர், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகிய முன்று முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி சென்னை அணிக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

பின்னர், விக்னேஷை போட்டி முடிந்த பிறகு மகேந்திர சிங் தோனி பாராட்டினார். அதோடும் டக் அவுட்டிற்குச் செல்லும் முன்னர், விக்னேஷை அழைத்து சில நிமிடங்கள் பேசினார் தோனி. இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. மேலும், தோனி என்ன பேசினார் என்ற தேடலும் நீடித்தது.

MSD

இந்த நிலையில், விக்னேஷின் நண்பரான ஸ்ரீராக் என்பவர் அதனை வெளிப்படுத்தியுள்ளார். விக்னேஷை பயிற்சிக்கு அழைத்துச் சென்ற நெருங்கிய நண்பரான ஸ்ரீராக், போட்டி முடிந்த மறுநாளே அவருக்கு போன் செய்து, தோனி என்ன சொன்னார்? எனக் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா கனவை பார்க்கப் போகிறாரா இபிஎஸ்? டெல்லி விசிட்டின் பரபரப்பு அரசியல் பின்னணி!

அதற்கு, விக்னேஷிடம் என்ன வயது உனக்கு என்று தோனி கேட்டதாகவும், விக்னேஷை ஐபிஎல்லுக்கு அழைத்து வந்த அதே விஷயங்களைத் தொடர்ந்து செய்யவும் தோனி அட்வைஸ் செய்தார் என்றும், ஸ்ரீராக் சஸ்பென்ஸை உடைத்துள்ளார். அதாவது, ஐபிஎல்லில் தேர்வாக செய்வதற்கான பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும் விக்னேஷிடம் தோனி அறிவுறுத்தியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?