தரமற்ற சிக்கனால் சிக்கிய முஹைய்தீன் பிரியாணி கடை : ஊசிப் போன குஸ்கா.. பதப்படுத்தப்பட்ட இறைச்சி பறிமுதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2022, 2:10 pm
Biriyani Hotel Issue -Updatenews360
Quick Share

விழுப்புரம் : திறக்கபட்டு மூன்று  மாதமே ஆன பிரியாணி கடையில் 3 நாட்களான பழைய கோழி கறி பிரியாணி வழங்கியதாக கூறி வழக்கறிஞர் கடையினை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் நீதிமன்றம் எதிரே பல்லாவரம் யா. முஹைய்தீன் அசைவ உணவகம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு மட்டன் , சிக்கன், காடை பிரியாணி முதல் மாலை நேர உணவுகளும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று மாலை அந்த உணவகத்தில் விழுப்புரத்தை சேர்ந்த மதிவாணன் மற்றும் ஸ்ரீபால் ஆகிய 2 வழக்கறிஞர்கள் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். பிரியாணி ருசி மாறி இருந்ததால் இதுகுறித்து கடை ஊழியர்களிடம் வழக்கறிஞர்கள் கேட்டுள்ளனர்.


பிரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே இருவரும் வாந்தி எடுத்தவாறு லேசான  மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த  ஊழியர்கள் தண்ணீர் கொடுத்து இருவரையும் ஆசுவாசப்படுத்தினர்.

இச்சம்பவம் நீதிமன்றத்தில் பரவ வழக்கறிஞர்கள் உணவகத்தில் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார்  உணவகத்திற்கு வந்த தாலுக்கா காவல்துறையினர் உணவ உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 3 நாட்களுக்கும் மேலாக சேமிப்பு கிடங்கில் பதப்படுத்தி வைக்கப்பட்ட இறைச்சிகளை  கொண்டு  சமைத்த பிரியாணி மற்றும் அசைவ உணவு பரிமாறப்பட்டதாக தெரிய வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த  வழக்கறிஞர்கள் கடையை முற்றுகையிட்டதால் கடை உரிமையாளர் வழக்கறிஞர்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டதால்  பரப்பரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து காவல்துறை உணவக உரிமையாளரை எச்சரித்ததை தொடர்ந்து வழக்கறிஞர்கள் பிரியாணி கடையில் 10 ஆயிரம் வாங்கி கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் இன்று தரமற்ற உணவு விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விழுப்புரத்தில் உள்ள பல்லாவரம் யா. முஹைதீன் பிரியாணி கடையில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது பிரியாணி கடையில் உணவக ஊழியர்கள் கையுறை, ஹெட்கேப் அணியாமல் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடையின் உணவு பாதுகாப்பு உரிமம் பார்வையில் இல்லாமல் இருந்ததால் அதிகாரிகள் கடை உரிமையாளரை கடிந்து கொண்டு நோட்டீஸ் வழங்கினர். மேலும் கடையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 1 கிலோவை பறிமுதல் செய்து எச்சரிக்கை செய்தனர்.

Views: - 651

0

0