முக்கொம்பு அணையில் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு… நள்ளிரவில் உடனடியாக ஆய்வு செய்த ஆட்சியர்..!!

Author: Babu Lakshmanan
4 August 2022, 8:58 am

திருச்சி : திருச்சி முக்கொம்பு அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் நள்ளிரவில் ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கோள்ளவும், விழிப்புணர்வுடன் பணியாற்றிடவும் அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கம்பரசம்பேட்டையில் உள்ள கங்காரு மனநலக் காப்பகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் நள்ளிரவில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ளவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிட உத்தரவிட்டு, நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது அந்தநல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் துரைராஜ், நீர்வளத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!