கோவையில் இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு: 5வது குற்றவாளி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!!

Author: Aarthi Sivakumar
7 August 2021, 9:02 am
Quick Share

கோவை: இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக 5 வது குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். கடந்த 2016ம் ஆண்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முகமது ரபிக் ஹாசன் ஓமனில் தலைமறைவாக இருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஓமனில் இருந்து டெல்லிக்கு வந்த முகமது ரபிக் ஹாஸனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நேற்று அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

எனவே இந்த வழக்கில் ஏற்கனவே கைதான 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐந்தாவதாக கைதான முகமது ரபிக் ஹசன் மீது தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 569

0

0