சொத்துக்காக அண்ணன் மகள் மீது கொலைவெறி தாக்குதல்.. ஆபாச வார்த்தையில் பேசும் திமுக பிரமுகர் : வைரலாகும் ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2024, 7:17 pm

சொத்துக்காக அண்ணன் மகள் மீது கொலைவெறி தாக்குதல்.. ஆபாச வார்த்தையில் பேசும் திமுக பிரமுகர் : வைரலாகும் ஷாக் வீடியோ!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயக்கோட்டையை அடுத்த, எச்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி, கடந்த 2022 ஆம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில், இவருக்கு சொந்தமான விளைநிலங்கள் நெடுஞ்சாலைத் துறையினரால் சாலை அமைப்பதற்கு கையகப்படுத்தியதற்கான இழப்பீடு தொகை சுமார் 2.30 கோடி ரூபாய், ஒரே கூட்டு குடும்பமாக இருந்த சூழலில் இறந்தவரின் வாரிசாக, அவரது சகோதரர் கணேசன் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இறந்த முனிசாமியின், மகள் ஜானகி, கணவனை இழந்த நிலையில் அவரது மூன்று மகள்கள் மற்றும் மகனுடன் மிகுந்த பொருளாதார சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக ஜானகி தனது சொந்த சித்தப்பாவான கணேசனிடம் குடும்ப சூழ்நிலை கருதி இழப்பீட்டுத் தொகையில் மகள் என்ற உரிமையில் பங்கு வழங்க வேண்டும் என கேட்டு இருக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்ட திமுக விவசாய அணி தலைவராக உள்ள கணேசன், அவரது தம்பி பொன்னுசாமி அவரது மகன் முத்து, கணேசன் மனைவி பூங்கொடி, மற்றும் மொளகியம்மாள் ஆகியோர் சேர்ந்து, ஜானகியை தனது சொந்த அண்ணன் மகள் என்றும் கூட பாராமல் எந்த பங்குத் தொகையும் தர முடியாது என கூறியதுடன் கடுமையாக ஆயுதகலால் தாக்கியதாக கூறப்படுகிறது. ஜானகி என்பவரை அவரது சித்தப்பா கணேசன் தாக்கும் வீடியோ காட்சிகள் இணையங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் ஜானகி, இதுகுறித்து ராயக்கோட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்த நிலையில், திமுக நிர்வாகி என்ற பொறுப்பை வைத்துக்கொண்டு காவல்துறையினரை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுப்பதாகவும், கொலை செய்யும் நோக்கத்திலேயே தன்னை அண்ணன் மகள் என்றும் கூட பாராமல் தன்னை தகாத வார்த்தைகளால் பேசுவதுடன் தன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜானகி தெரிவித்தார்.

எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!