பிரபல கொள்ளையன் முருகன் உயிரிழப்பு…!!

27 October 2020, 12:01 pm
murugan - updatenews360
Quick Share

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த வருடம் அதிகாலையில் 2 கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த கொள்ளையை அரங்கேற்றியது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் என்ற தகவல் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. முருகன் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் கைவரிசை காட்டி உள்ளார். முருகன் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு தெலங்கானாவில் ஆகஸ்டு மாதம் பாலன் நகரிலும், டிசம்பர் மாதம் மக்பூப் நகரிலும் முருகன் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளான். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு தெலங்கானா போலீசார் முருகன் தலைமையிலான கொள்ளை கும்பலை கைது செய்தனர்.

2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்த பிறகு, மீண்டும் தனது கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளது முருகன் தலைமையிலான கொள்ளை கும்பல். இந்நிலையில் கொடூர நோயால் பாதிக்கப்பட்ட முருகன் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.

இந்நிலையில் திருச்சி நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். 6 மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொள்ளையன் முருகன் உயிரிழந்தார்.

Views: - 17

0

0