வீட்டு வாசலில் காத்திருந்த இஸ்லாமியர் சுட்டுக்கொலை ; பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2025, 11:55 am

இஸ்லாமியர் ஒருவர் அதிகாலையில் வீட்டு வாசலில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகரின் ரோராவரில் உள்ள தெலிபாடா பகுதியில் வசித்த வந்த 25 வயது இளைஞர் கட்டா. இவர் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு அதிகாலை 3.15 மணியளவில் ரம்ஜான் நோன்பு உணவு சாப்பிட காத்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த வழியே இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கட்டா மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றது.

Muslim man shot dead while waiting at home; CCTV footage stirs up panic

இதில் கட்டாவுடன் உடன் இருந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். கட்டா ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். உடனே அந்த மர்நபர்களில் ஒருவன் கட்டா இறந்துவிட்டானா என்பதை உறுதி செய்ய மீண்டும் பல முறை கட்டா மீது துப்பாக்கியால் சுட்டான்.

பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!