இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகி ஏமாற்றிய சப் இன்ஸ்பெக்டர்! ஆடியோ லீக்!!

30 August 2020, 2:42 pm
Girl Abused by Police- Updatenews360
Quick Share

மயிலாடுதுறை : சப்-இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் அளித்த பாலியல் புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஒரடிஅம்பலத்தை சேர்ந்தவர் காவல்உதவி ஆய்வாளர் விவேக்ரவிராஜ். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு மணல்மேடு காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றியபோது விவேக் ரவிராஜிக்கும் மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்து காதலாக மாறி நெருக்கமாக பழகியதில் அப்பெண் கருவுற்றாள். அதன்பின் காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி கருவை கலைக்க முயற்சித்துள்ளார்.

இதற்கு அப்பெண் உடன்படாததால் விவேக்ரவிராஜ் தன் தாயார் ராஜாத்தியை அழைத்து வந்து கருவை கலைத்துவிட சொல்லியும், அதன்பின் தனது மகன் உன்னை திருமணம் செய்து கொள்வான் என்று கருவை கலைக்க ராஜாத்தி கூறியுள்ளார்.

அதனை ஏற்றுக்கொண்டு அப்பெண் கருவை கலைத்த பின்னர், அப்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்த விவேக் ரவிராஜ் இளம்பெண்ணை ஆபாசமாக பேசி திட்டி திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதுகுறித்து, காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட பெண் விவேக்ரவிராஜிடம் நெருக்கமாக இருந்த போட்டோ விவேக்ரவிராஜ் மிரட்டும் ஆடியோவை சமூகவலைதளக்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பெண் வழக்குத் தொடுத்திருந்தார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் தற்போது நாகை மாவட்டம் வலிவலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் விவேக் ரவிராஜ் மற்றும் அவரது தாயார் ராஜாத்தி மீது இன்று மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்பெண் கூறியதாவது: தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் வலிவலம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றும் விவேக் ரவிராஜ் மீது, திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி, அதன் விளைவாக கருவுற்று, அதனை வலுக்கட்டாயமாக கருவை கலைக்க வைத்து மோசடி செய்ததாகவுதம், அதன்பின்னர் திருமணம் செய்துகொள்ள மறுத்து பல தொல்லைகள் கொடுப்பதாகவும் அளித்த புகார் மீது 17 மாதங்களுக்கு பிறகு மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி விவேக் ரவிராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ், அவரது தாயார் ராசாத்தி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்தி இதுதொடர்பான வழக்குகள் அனைத்தையும் பதிவு செய்வதாக காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யாவிட்டால் அதையும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து பெறுவேன் என்றார்.

கடந்த 2 நாட்களாக காவல் நிலையத்திற்கு வந்து செல்லும்போது கார், மற்றும் சரக்குவாகனங்களில் வந்து கொலை செய்ய முயற்சி செய்தனர். எனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மற்றும் அவரை சார்ந்தவர்களே காரணம் என்றார்.