தனியார் மருத்துவமனையில் பெண்ணை தாக்கிய மர்மநபர் : வெளியான சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran
12 October 2020, 12:11 pm
Quick Share

திருப்பூர் : தனியார் மருத்துவமனையில் உள்ள வரவேற்பரையில் இருந்த பெண்ணை மர்மநபர் தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பகுதியில், உள்ள தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர், இடுப்பில் மறைத்து வைத்திருந்த பொருளை கொண்டு மருத்துவமனை வரவேற்பறையில் நின்றிருந்த பெண்ணின் மீது திடீரென தாக்குதல் நடத்தினார்.

தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான பெண் மற்றும் பொதுமக்கள் தாக்குதலில் ஈடுபட்டவரை விரட்டியதை தொடர்ந்து அந்நபர் மருத்துவமனையிலிருந்து ஓடினார். இதனிடையே, தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் மீது தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபர் மனோகரன் என்பது தெரியவந்தது.

அவரை திருமுருகன் பூண்டி போலீசார் மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன் மருத்துவமனைக்குள் சென்ற மர்மநபர் பெண் மீது தாக்குதலில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Views: - 50

0

0