1 ரூபாய் காணிக்கை…கோவில் உண்டியல் அபேஸ்…பலே திருடனை தேடும் போலீசார்…..!!

By: Aarthi
16 October 2020, 2:03 pm
tem robbery -updatenew360
Quick Share

சென்னை: மருந்தீஸ்வரர் கோவிலில் 1 ரூபாய் காணிக்கை செலுத்திவிட்டு மொத்த உண்டியலையும் அபேஸ் செய்த திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, திருவான்மியூரில் உள்ள புகழ்பெற்ற மருந்தீஸ்வரர் கோவில் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபடும் தலமாக உள்ளது. நேற்றிரவு வழக்கம் போல் கோவிலை மூடிவிட்டு சென்ற நிர்வாகிகள், காலையில் கோவிலை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவிலின் உள்ளே இருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, கோவில் நிர்வாகம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் 2 உண்டியலிலும் சுமார் 1 லட்சம் ரூபாய் வரையிலான காணிக்கை இருந்திருக்க வாய்ப்புள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த திருடன், உண்டியலை இரும்பு கம்பிகொண்டு உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், உண்டியலை உடைப்பதற்கு முன் ஒரு நாணயத்தை அந்த திருடன் உண்டியலில் போடும் காட்சிகளும் பதிவாகியிருந்தது.

கோவிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 46

0

0