மதுரை விமான நிலையத்திற்கு வந்த மர்ம பார்சல்; கமாண்டோ படை குவிப்பால் பரபரப்பு

4 February 2021, 7:33 pm
Quick Share

மதுரை: மதுரை விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் மர்ம பார்சல் வெடிகுண்டா என விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையத்தின் உள்ளே சரக்கு முனைய பகுதியில் கிடந்தந்த மர்ம பார்சலால் ஊழியர்கள் பீதியடைந்தனர் .அது வெடி குண்டாக இருக்கும் என கருதி ஊழியர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர் . இதனைத் தொடர்ந்து சரக்கு முனைய பகுதியில் உள்ள ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

மேலும் தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து வந்த 4 பார்சல்களும் வெளியே பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பார்சல்களைச் சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் அதனைப் பிரித்துப் பார்த்தபோது அதில் ஸ்மார்ட் வாட்ச், சார்ஜர், மிக்சர், இட்லிபொடி, கார்ன் சிப்ஸ் உள்ளிட்டவைகள் இருந்தன. பார்சலில் ஒன்றும் இல்லாததையடுத்து அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.

Views: - 0

0

0