ரெய்டின் போது அமைச்சர் வீட்டு மாடியில் திறக்கப்படாத மர்ம அறை… உடைக்கும் முயற்சியில் அதிகாரிகள்!
Author: Udayachandran RadhaKrishnan16 August 2025, 3:11 pm
திமுக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 16, 2025) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றனர்.
அங்கு ஐ.பெரியசாமியோ, அவரது குடும்பத்தினரோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், வீட்டை சோதனையிட வேண்டும் என அதிகாரிகள் கோரியபோது, அங்கிருந்தவர்கள் மறுத்துவிட்டனர்.
இதனால், சுமார் 20 நிமிடங்கள் அங்கேயே காத்திருந்த அதிகாரிகள், பின்னர் பெரியசாமியிடம் அனுமதி பெற்று வீட்டிற்குள் நுழைந்தனர்.வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், மாடியில் இருந்த ஒரு பூட்டிய அறையை சோதனையிட விரும்பினர். இந்த அறையை ஐ.பெரியசாமி கூட இதுவரை பயன்படுத்தியதில்லை எனக் கூறப்பட்டது.
ஆனால், அதிகாரிகள் அந்த அறையையும் சோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு அங்கிருந்த காவலர்கள், தங்களிடம் அறையின் சாவி இல்லை எனக் கூறி மறுத்தனர்.
இதையடுத்து, பூட்டை உடைக்க முடிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சுத்தியலுடன் சென்றனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைமைச் செயலகத்தில் பூட்டப்பட்ட அறைகள்இதற்கிடையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அவரது எம்எல்ஏ மகனுக்கும் தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ள அறைகளின் நுழைவுவாயில்கள் திடீரென பூட்டப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
