புதுச்சேரிக்கு 4வது முறையாக முதலமைச்சரானார் ரங்கசாமி : ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

7 May 2021, 2:23 pm
pondy cm - rangasamy
Quick Share

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக 4வது முறையாக என். ரங்கசாமி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி பிடித்தது. என்ஆர் காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களையும் கைப்பற்றியது.

இதையடுத்து, ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனை ஏற்றுக் கொண்ட ஆளுநரும், ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதைத் தொடர்ந்து, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பிற்பகல் ஒரு மணிக்கு நடந்த பதவியேற்பு விழாவில், என். ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதன்மூலம், புதுச்சேரி முதலமைச்சராக 4வது முறையாக ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இரு முறையும், என்.ஆர் காங்கிரஸ் உருவாக்கிய பிறகு ஒரு முறையும் முதலமைச்சராக அவர் இருந்துள்ளார்.

Views: - 270

1

0