நாம் தமிழர் கட்சி பிரமுகர் படுகொலை… குமரியில் வெடித்த போராட்டம் : ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.. பாதிரியார் மீது வழக்குப்பதிவு!

Author: Udayachandran RadhaKrishnan
21 January 2024, 4:12 pm

நாம் தமிழர் கட்சி பிரமுகர் படுகொலை… குமரியில் வெடித்த போராட்டம் : ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.. பாதிரியார் மீது வழக்குப்பதிவு!

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியை சேர்ந்தவர் சேவியர் குமார். அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவருக்கும் மைலோடு புனித மிக்கேல் ஆலய பங்கு நிர்வாகிகளுக்குமிடையே வாட்ஸ் ஆப் குழுவில் ஏற்பட்ட கருத்து மோதல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று மதியம் சேவியர் குமாரை பேச்சுவார்த்தைக்காக மைலோடு தேவாலய வளாகத்தில் உள்ள பாதிரியார் அலுவலத்திற்கு பங்கு நிர்வாகிகள் அழைத்துள்ளனர்

அப்போது பாதிரியார் ராபின்சன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் பாதிரியார் மற்றும் பங்கு நிர்வாகிகள் சேர்ந்து சேவியர் குமாரை தாக்கியுள்ளனர் தாக்குதலின் போது பாதிரியார் அலுவலகத்தில் இருந்த அயண் பாக்ஸ் மற்றும் பூச்சட்டியால் சிலர் அவரை தலையில் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்த முயன்ற போது அங்கு திரண்ட அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆலய வளாகத்தில் திரண்டு குற்றவாளிகளை கைது செய்யாமல் சடலத்தை எடுக்க கூடாது என கூறி போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

உயிரிழந்த சேவியர் குமார் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக உள்ளார்.
இந்த நிலையில் ட்விட்ரில் #justicefor_Xavierkumar என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. ,இதனிடையே பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?