விஜய் தேவரகொண்டா படத்துக்கு நாம் தமிழர் எதிர்ப்பு… திரையரங்கை முற்றுகையிட்டதால் காட்சி ரத்து!
Author: Udayachandran RadhaKrishnan5 August 2025, 2:10 pm
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி உள்ள கிங்டம் திரைப்படம் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல மிகத் தவறாக சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம் பெற்றுள்ளதாகவும், இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்களை ஒடுக்கினார்கள் என ‘கிங்டம்’ திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத் திரிபு என கூறி நாம் தமிழர் கட்சியினர் தமிழ்நாட்டில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா மீனா திரையரங்கில் வெளியாகி உள்ளது.
திரைப்படத்தை திரையிட கூடாது என கூறி நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் சரவணன் தலைமையில் 20-க்கு நாம் தமிழர் கட்சியினர் திரையரங்க மேலாளரிடம் இலங்கை தமிழர்களை தவறாக சித்தரிக்கும் இந்த திரைப்படம் திரையிடக்கூடாது.

மேலும், திரைப்பட பேனர்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.தொடர்ந்து திரையிட்டால் அறவழியில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர் .
இதனை தொடர்ந்து இன்று மதியம் திரையிட இருந்த 2.30 திரையிட இருந்த காட்சி ரத்து செய்யப்பட்டது. மேலும் திரையரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த திரைப்பட பேனர் அகற்றப்பட்டது.

திரைப்படத்தின் எதிர்ப்பு காரணமாக நாம் தமிழர் கட்சியினர் அங்கு குவிந்தததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
