காதல் மன்னன் காசி மீது மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

Author: Udayaraman
11 January 2021, 10:45 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் காதல் மன்னன் காசி மீதான இரண்டாவது குற்றப்பத்திரிகை நாகர்கோவில் ஜே எம் நீதிமன்றத்தில் நீதிபதி கிறிஸ்டியான் முன்னிலையில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். ஏற்கனவே இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பெண்களிடம் ஆபாசமாக சீண்டல் செய்த வழக்கில் 3-வது குற்றப் பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பு கொண்டு காதலிப்பது போல் நடித்து அவர்களோடு தனியறையில் உல்லாசம் அனுபவித்ததை ரகசிய கேமராக்கள் மூலம் வீடியோக்கள் எடுத்து அவற்றை வைத்து மிரட்டி பணம் பறித்ததாக நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர் மீது புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். கந்துவட்டி தொடர்பாக ஒரு இளைஞர் அளித்த புகார் மற்றும் இதுவரை காசியால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் அளித்த புகார்கள் என மொத்தம் ஏழு புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சிபிசிஐடி போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, கந்துவட்டி தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய ஆறு வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்து வந்தது. குற்றப்பத்திரிக்கை தயார் செய்யும் பணிகளில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இரண்டு வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மூன்று வழக்குகள் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பொங்கல் விடுமுறை முடிந்ததும் இந்த மூன்று வழக்குகள் மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன என சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று இரவு நாகர்கோவில் ஜெ எம்.நீதிமன்றத்தில் நீதிபதி கிறிஸ்டியான் முன்னிலையில் சிபிசிஐடி போலீசார் மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பொங்கல் பண்டிகை நிறைவடைந்ததும் மேலும் 3 வழக்குகள் அவர் மீது தாக்கல் செய்ய தயார் நிலையில் சிபிசிஐடி போலீசார் உள்ளனர்.

Views: - 48

0

0