இளம்பெண்களை சீரழித்த நாகர்கோவில் காசி…! வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

23 May 2020, 1:45 pm
Quick Share

நாகர்கோவில்: பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக பல இளம்பெண்களிடம் பழகி, வீடியோ எடுத்ததுடன், அதை காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். பின்னர் குண்டர் சட்டம் அவர் மீது பாய்ந்தது.

பெண்களை ஏமாற்றி பாலியல் மோசடி செய்ததாக 4 வழக்குகள், போஸ்கோ வழக்கு, கந்துவட்டி வழக்கு என 6 வழக்குகள் காசி மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதையடுத்து முதற்கட்டமாக நாகர்கோவில் கூடுதல் மகளிர் விரைவு குற்றவியல் நீதிமன்றத்தில் 3 நாட்கள் காசியிடம்  விசாரணை நடத்தினர். 3 நாள் விசாரணையிலும் காசி வாயே திறக்கவில்லை என்று கூறப்பட்டது.

2 ம் கட்டமாக 6 நாட்கள் காசியை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில், அரசியல் பிரமுகர்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த விஐபிக்கள் பின்னணியில் இருப்பதால், காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply