உரிய ஆவணமின்றி முட்டை வியாபாரிகள் எடுத்துச் சென்ற ரூ.6.55 லட்சம் ரொக்கம் பறிமுதல்

2 March 2021, 6:39 pm
Namakkal cash - updatenews360
Quick Share

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் மெட்டலாவில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட முட்டை வியாபாரிகளிடம் இருந்து ரூ.6.55 இலட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் 36 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இரவு பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மெட்டலாவில் தேர்தல் பறக்கும் படையினர் சுந்தரபாண்டியன் தலைமையில் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னை பொன்னேரியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் நாமக்கல்லில் முட்டை வாங்குவதற்காக உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.65 ஆயிரம், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பாரதி என்பவரிடம் ரூ.5 இலட்சமும், ஆண்டலூர்கேட் பகுதியில் பச்சுடையாம்பட்டியை பிரபு என்பவரிடமிருந்து ரூ.90 ஆயிரம் என மொத்தம் ரூ.6.55 பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, பறிமுதல் செய்த ரொக்கப் பணத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ராசிபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், ரொக்கம் அனைத்தையும் ராசிபுரம் சார்பு கரூவூலத்தில் வழங்கப்படும் என்றும், அங்கு உரிய ஆவணங்களை வழங்கி உரிமையாளர்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

Views: - 1

0

0