பார்வையற்ற ஆசிரியரை கேலி, கிண்டல் செய்த பள்ளி மாணவர்கள் : கில்மா பாடலுக்கு வகுப்பறையில் ஆட்டம் போட்டு அட்டூழியம்…!!
Author: Babu Lakshmanan1 October 2021, 1:25 pm
நாமக்கல் : ராசிபுரம் அருகே பார்வையற்ற அரசு பள்ளி ஆசிரியரை கேலி கிண்டல் செய்து நடனமாடி, வீடியோவை சமூக வலைதளங்களில் பரவ விட்ட மாணவர்களுக்கு வி 9 ம் வகுப்பு மாணவர்கள்
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, ஆசிரியர்களுக்கு இந்த பெருந்தொற்றுக்கு மத்தியில் பள்ளிக்கு வந்து வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பார்வையற்ற ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தும் போது, அவரது பார்வை குறைபாட்டை சாதகமாக்கிய அதிக பிரசிங்கி மாணவர்கள் சிலர், டிக்டாக் வீடியோவுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுசத்திரம் அரசுப்பள்ளியில் பார்வையற்ற ஆசிரியராக பன்னீர் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர், 9ம் வகுப்பிற்கு வரலாற்று பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது, மாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்து, அதனை செல்போனில் டிக்டாக் வீடியோவாக எடுத்து மாணவர்கள் சமூக வளைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.
வகுப்பறையில் மட்டுமல்லாது பள்ளிக்கு வெளியிலும் செல்லும் போது, பார்வை குறைபாடுள்ள ஆசிரியர் பன்னீரை இதைவிட மோசமாக நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இது குறித்து தலைமையாசிரியர் குணசேகரனிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து கண்டிப்பதாக தெரிவித்தார்.
கடவுளுக்கு நிகராக கருதப்படும் மிக சிறந்த வரலாற்று மிக்க பார்வையற்ற ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம் வேதனையாக உள்ளதாக கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர். மேலும், வகுப்பறையில் மாணவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
0
0