‘பா.ஜ.க. கம்பத்தில் பறந்த தேசியக்கொடி’ : பா.ஜ.க நிர்வாகி மீது வழக்கு!!

18 August 2020, 10:30 am
Cbe Filed Case against BJP - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் பாரதிய ஜனதா கட்சி கொடியுடன் தேசியக்கொடியை பறக்கவிட்டு அவமதிப்பு செய்ததாக அக்கட்சியின் மண்டல பொறுப்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கணபதி மண்டலத் தலைவராக பதவி வகிப்பவர் வெங்கடேஷ். இவர் கடந்த 15ஆம் தேதி அதாவது சுதந்திர தினத்தன்று கணபதி பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் கொடியுடன் தேசியக் கொடியை கட்டி பறக்க வைத்துள்ளார்.

இது தொடர்பாக சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் தேசியக்கொடி அவமதிப்பு தடுப்பு சட்டம் 1971 இன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்