மகனைக் காக்க போராடும் நயன்தாரா.. வெளியானது ‘ஓ2’ படத்தின் டீசர்..!

Author: Rajesh
16 May 2022, 11:06 am

எட்டு வயது மகனுடன் நயன்தாரா பேருந்தில் பயணிக்கிறார். மகனுக்கு நுரையீரல் பிரச்சினை இருப்பதால் எப்போதும் கைவசம் சிறிய ரக ஆக்ஸிஜன் சிலிண்டர் வைத்திருக்கிறார். மலைப்பகுதியில் செல்லும்போது பேருந்து விபத்துக்குள்ளாகி சக பயணி ஒருவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. நயன்தாராவிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரைக் கைப்பற்ற சக பயணிகள் முயற்சிக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் பார்வதி என்கிற பெண்ணாக நயன்தாரா தன் மகனைக் காக்க என்ன செய்தார் என்பதுதான் `ஓ2’ படத்தின் கதை.

சிறந்தக் கதைகளைப் படமாக்கிவரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தை, அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஜி.எஸ். எழுதி, இயக்கியிருக்கிறார். டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர்  இன்று வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!