சென்னைக்கு குட்-பை… நயன்தாராவுடன் வெளிநாடு புறப்பட்ட விக்னேஷ் சிவன்.. அதுவும் தனிவிமானத்தில்… எங்கு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
12 August 2022, 4:58 pm

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், Connecting, மற்றும் இன்னும் சில படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்தார். மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.

இதைத் தொடர்ந்து, நீண்ட நாட்களாக காதலர்களாக வலம் வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன், சென்னை மாமல்லபுரத்தில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணப் புகைப்படங்களை கூட, திரைப்படங்களின் போஸ்டர்களை வெளியிடுவது போன்று, மெல்ல மெல்ல வெளியிட்டனர்.

பின்னர், HoneyMoon சென்று விட்டு சென்னை வந்த அவர்கள், சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர். நயன்தாராவின் கரம்பிடித்த ராசியோ என்னமோ, சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க நிகழ்ச்சி மற்றும் நிறைவு விழாவை நடத்தும் ஆர்டரை விக்னேஷ் சிவன் பெற்றார்.

அவரும் அதனை கனகச்சிதமாக நடத்தி முடித்தார். இது அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. அதேவேளையில், நயன்தாராவும் படத்தில் நடிப்பதை பிஸியாக இருநது வந்தார்.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி ஏற்பாடுகளால் அதிக வேலைப்பளுவால் இருந்து வந்த விக்னேஷ் சிவன், தற்போது சற்று ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். இதற்காக, தனது மனைவி நயன்தாராவை அழைத்துக் கொண்டு, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றுள்ளார்.

அதுவும் தனி விமானத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்க்கும் ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • wine party right after the wedding... Netizens shower Priyanka திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!