என்ன ரொமான்ஸ்.. காதலர் தினத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா : வாயடைத்துப் போன விக்னேஷ் சிவன்!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2022, 4:42 pm
Nayan Vignesh Shivan- Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் வெகு காலமாக காதலர்களாக வலம் வருபவர்கள் நயன்தாரா விக்னேஷ் சிவன். இவர்கள் எப்போது திருமணம் செய்ய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அவர்களுடைய ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

ஆனால் இன்னும் காதலர்களாக இருவரும் வெளிநாடுகளுக்கு பறப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காதலர் தினத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு பூங்கொத்து கொடுத்து தனது காதலை தெரிவித்துள்ளார்.

இது குறித்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் நான் பிழை பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசை பெற்று ஷாக்கான விக்னேஷ், நயன்தாரா இறுக்கி கட்டிப்பிடித்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரும் ஏப்ரல் 17ம் தேதி வெளியாகிறது,

இன்ஸ்டாவில் புகைப்படங்கள் பதிவிட்ட விக்கி, காத்து வாக்குல ஒரு காதல் என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 704

4

2